கிணற்றில் தவறி விழுந்த பட்டதாரி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சங்குப்பேட்டை டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் செல்வம் என்பவர் வசித்துவருகிறார். இவருடைய மகன் வசந்தகுமார்(22). இவர் பிஏ இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் பகுதி நேரமாக வெங்கடேச புறத்திலுள்ள பரகர் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விளாமுத்தூர் சாலையில் உள்ள ரங்கநாதனின் வயலில் உள்ள கிணற்றிற்கு வசந்தகுமார் குளிக்க சென்றபோது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி வசந்தகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.