Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குளித்து கொண்டிருந்த ஊழியர்…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

குளித்துக்கொண்டிருக்கும் போது தண்ணீரில் மூழ்கி வாலிபர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கோவிலாங்குளம் பகுதியில் முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்து அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் முத்து தண்ணீரில் மூழ்கினார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் முத்து ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |