Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குளித்து கொண்டிருந்த சிறுமிக்கு தொந்தரவு…. முதியவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கூத்தம்பட்டி பகுதியில் அய்யாவு என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வந்துள்ளார். இதற்காக அய்யாவு அப்பகுதிகளில் இருக்கும் வீடுகளில் பழைய கஞ்சி தண்ணீரை சேகரித்து வருவது வழக்கம். கடந்த 2020-ஆம் ஆண்டு ஒரு வீட்டில் பழைய கஞ்சி தண்ணீரை சேகரிக்க சென்ற போது குளியல் அறையில் குளித்து கொண்டிருந்த 8 வயது சிறுமியை கட்டிப்பிடித்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால் அச்சத்தில் சிறுமி கூச்சலிட்டதும் அய்யாவு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அறச்சலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அய்யாவுவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்ற நீதிபதியும் மாலதி அய்யாவுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 3500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்

Categories

Tech |