தண்ணீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அக்கிவிளை பகுதியில் மார்க்கோஸ்(55) வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும், இருக்கின்றனர். வெளிநாட்டில் தொழிலாளியாக பணிபுரிந்த மார்க்கோஸ் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உடல் நல குறைவு காரணமாக சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் மார்க்கோஸ் குழித்துறை தாமிரபரணி ஆற்றல் குளிப்பதற்காக சென்றுள்ளார். தண்ணீர் அதிகமாக சென்றதால் திடீரென மார்க்கோஸ் காணாமல் போய்விட்டார்.
இதுகுறித்து ஆற்றில் குளித்தவர்கள் மார்க்கோசியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மார்க்கோஸின் மகன் அஸ்வின்(17) உறவினர்களுடன் வந்து ஆற்றில் இறங்கி தேடி தனது தந்தையின் சடலத்தை மீட்டார். இது குறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று மார்க்கோசின் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.