குளத்தில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வட்டக்கோட்டை பகுதியில் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன்பின் ஏசுதாசுக்கு சுசிலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் 2 பேரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து மகாராஜபுரம் பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் சுசிலாவுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் தத்தளித்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஏசுதாஸ் அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். ஆனால் அவர்கள் வருவதற்குள் சுசீலா குளத்திற்குள் மூழ்கினார். இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் சுசிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏசுதாசிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.