மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள அருவங்காடு பகுதியில் ஜீவா-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மாலினி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாலினி ஆன்லைன் மூலம் வகுப்பில் கவனம் செலுத்தி கொண்டிருந்தார். இதனையடுத்து குளிப்பதற்காக சென்ற மாலினி நீண்ட நேரமாகியும் குளியலறையை விட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஜீவா கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாலினி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாலினி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.