Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

குளிப்பதற்கு சென்ற அண்ணன் தம்பி….. குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி …. போலீஸ் விசாரணை ….!!

குளிப்பதற்கு சென்ற அண்ணன் தம்பி  நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நெடும்பலம் கிராமத்தில் பசுபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிநாத் என்ற  மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பசுபதியின் மகளான பவதாரணிககு காதணி விழா  நடத்த குடும்பத்தினர் முடிவு செய்தனர் . இதற்காக வந்த ஹரிநாத்தின் சித்தப்பா   மகன் ஷியாம்குமாருடன் சேர்ந்து  அதே பகுதியில் அமைந்துள்ள குளத்திற்கு  குளிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது திடீரென இருவரும் நிலைதடுமாறி  நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று  ஹரிநாத் மற்றும் ஷியாம்குமார் ஆகிய 2 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |