தண்ணீரில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள போரிவயல் கிராமத்தில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மஞ்சுநாத் என்ற மாணவன் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கண்ணன்கோட்டை பகுதியில் அமைந்துள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி மஞ்சுநாத் தண்ணீரில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.