தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் அருவியில் குளிப்பதற்க்காக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் வந்துள்ளார். இந்நிலையில் குமார் குளித்துவிட்டு ஆற்றங்கரையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென குமார் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.