Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளிப்பதை வீடியோ எடுத்த வாலிபர்கள்….. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த 2 வாலிபர்களுக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி தேவி கருமாரியம்மன் கோவில் தெருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் சிலர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் 2 வாலிபர்கள் கையில் செல்போனுடன் சந்தேகத்திற்கிடமாக வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டிற்கு வெளியில் உள்ள குளியளறையில் யாரோ குளிப்பதை வீடியோ எடுப்பதை பார்த்ததும் பெண்கள் கூச்சலிட்டனர்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்து வேளச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கம்ப்யூட்டர் என்ஜீனியரான ஸ்ரீராம்(29) மற்றும் அவரது நண்பரான வெங்கடேசன் (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து செல்போனை ஆய்வு செய்ததில் பெண்கள் குளிக்கும் வீடியோக்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |