அவமானம் தாங்க முடியாமல் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் பகுதியில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாது என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாது அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் பெண் ஒருவர் குளித்துக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் தனது உறவினர்களிடம் இது பற்றி தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் மாதுவின் வீட்டிற்கு சென்று அவரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் மனமுடைந்த மாது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து கண்டமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மாதுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.