தாயுடன் வழுக்கி கீழே விழுந்து ஒரு வயதுடைய குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஆறு மற்றும் 1 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இதில் ஒரு வயதுடைய விசிகா என்ற பெண் குழந்தையை கவிதா தூக்கிக்கொண்டு குளியலறைக்கு சென்று உள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் வழுக்கியதால் கவிதாவின் இடுப்பில் இருந்த குழந்தை கீழே விழுந்து படுகாயமடைந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கவிதா உடனடியாக தனது குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.