Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குளியலறைக்கு சென்ற மெக்கானிக்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

மெக்கானிக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இளைய சமுதாயத்தினர் பலரும் இன்றைய பிரச்சனைகளை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர். அதிலும் சிலர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்து கொள்கின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாகவும், வேலைப்பளு காரணமாகவும், வேலை கிடைக்காமலும், காதல் தோல்வியிலும் இன்று பல இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். சில நேரங்களில் ஏன் தற்கொலை செய்கிறார்கள் என்ற காரணம் தெரியாமலேயே போய் விடுகிறது. எனவே எதிர்காலத்தில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மன தைரியத்தோடு இளைஞர்கள் இருக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரனூர் பகுதியில் ரமேஷ்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மெக்கானிக் கடை நடத்தி வந்துள்ளார். இவருக்கு சாவித்திரி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் ரமேஷ் தனது வீட்டுக்கு குளியல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ரமேஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்தவர்கள் ரமேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |