Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குளியலறையில் இருந்த மனைவி…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. குமரியில் பரபரப்பு…!!

வீட்டு குளியலறையில் பெண் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சூரியகோடு பகுதியில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளியான வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குளியலறையில் ராதா மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த வின்சென்ட் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு ராதாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராதாவின் சடலத்தை கைப்பற்றி குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் இல்லாததால் ராதாவின் உடலை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மருத்துவமனையில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த ராதாவின் உறவினர்கள் இங்கேயே பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ராதாவின் உடல் இங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்படும் என மருத்துவமனை அதிகாரி உறுதியளித்த பிறகு பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு ராதாவின் சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |