பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு பத்தாவது கொள்ளுப்பேரன் பிறந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
பிரிட்டன் அரண்மனையின் மகாராணி இரண்டாம் எலிசபெத். இவருடைய மகள் சாரா டின்டால். இந்நிலையில் இங்கிலாந்து ரக்பி வீரர் மைக்கேல் டின்டால் என்பவரை திருமணம் செய்து ஏற்கனவே இரண்டு குழந்தைகளை பெற்றுள்ளார். இதனையடுத்து சாரா டிண்டாலுக்கு மூன்றாவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இவர் நேற்று குளியலறையை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது சாரா டின்டாலுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு அங்கேயே குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே பிரிட்டன் அரண்மனை மகாராணியாரின் பத்தாவது கொள்ளுப் பேரனாக பிறந்த இந்த குழந்தைக்கு லூகாஸ் டின்டால் என்ற பெயரை சூட்டி அனைவரும் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.