லண்டனில் வயதான பெண்மணி ஒருவர் வீட்டின் குளியறையில் இறந்துகிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் உள்ள இல்போர்ட் என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று வயதான பெண்மணி ஒருவர் வீட்டின் குளியல் தொட்டியில் உயிரிழந்து கிடந்துள்ளார். அதாவது அந்த குடியிருப்பிற்கு காவல்துறையினர் காலையில் சுமார் 10:57 மணியளவில் சென்றுள்ளனர். அப்போது 80 வயதுடைய பெண்மணி ஒருவர் குளியல் தொட்டியில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.
அவரை காப்பாற்றுவதற்கு காவல்துறையினர் முயற்சி செய்துள்ளனர். எனினும் அவரை காப்பாற்ற முடியாமல் போனது. இந்நிலையில் காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் அந்த இடத்தில் நின்றுகொண்டிருந்த 54 வயதுடைய ஒரு நபரை கைது செய்திருக்கின்றனர். மேலும் இந்த நபர் கொலை செய்யப்பட்ட அந்த பெண்ணிற்கு தெரிந்தவர்.
இது தொடர்பாக காவல்துறையினர் அக்கம்பக்கத்தினரிடம் விசாரிக்கும்போது ஒருபெண் கூறியுள்ளதாவது, அந்த வயதான பெண்மணி அந்த வீட்டில் 35 வருடங்களாக வாழ்ந்து வருகிறார். அவரது மரணம் வருத்தமளிக்கிறது. அதுவும் தன் சொந்த வீட்டிலேயே ஒருவருக்கு இப்படி நடப்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தொடர்ந்து தீவீர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.