Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குளிர்காலத்திற்கு ஏற்ற சிக்கன் மலாய்… மிக சுவையான ரெசிப்பி…!!!

குளிர் காலத்தில் மிக சுவைமிக்க உணவான சிக்கன் மலாய் சீக் கபாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.

பொதுவாக குளிர்காலங்களில் மக்கள் அனைவரும் சூடான உணவுகளை சாப்பிட வேண்டும் என்று நினைப்பது வழக்கம். அவ்வாறே குளிர் காலங்களில் மிக சுவையுடன் ருசித்து சாப்பிடுவதற்கான சிக்கன் மலாய் சீக் கபாப் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள். 50 கிராம் சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, 4 தேக்கரண்டி பிரஸ் க்ரீம், ஒரு ஸ்பூன் உலர்ந்த வெந்தய இலைகள், உப்பு, சாட் மசாலா, மிளகு, இஞ்சி பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அந்த கலவையுடன் பிரெட் கிரம்ஸ்களை சேர்க்கவும். பிறகு Skewers எனப்படும் குச்சியில் எண்ணெய் தடவி, அந்த கலவையை பிடித்தவாறு வைக்கவும். மேலும் சீக் கபாப்ஸ் வேகும் வரை அடுப்பில் காட்டவும். சமைத்தவுடன் இதை புதினா மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சூடாகப் பரிமாற குளிர்காலத்திற்கு சுவையான உணவாக இருக்கும்.

Categories

Tech |