Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குளிர்காலத்தில் மூட்டுவலியை சமாளிப்பது எப்படி…? இத பண்ணுங்க போதும்..!!

குளிர்காலத்தில் மூட்டுவலி என்பது பலருக்கும் தீவிரமாக இருக்கும். முடக்குவாதம், காயம், கடின உடற்பயிற்சி இவற்றால் மூட்டு வலி ஏற்பட்டாலும் குளிர் அதன் தாக்கத்தை அதிகப்படுத்தும். அன்றாட வாழ்க்கையில் மூட்டுவலி இடையூறாக உள்ளது.

குளிரும் மூட்டு வலியும்:

மூட்டு வலிக்கு எப்படி ஒரு குறிப்பிட்ட காரணம் இல்லையோ, அதுபோல குளிர்காலத்தில் அது தீவிரமாவதற்கும் காரணம் கிடையாது. வெளிப்புற காற்றின் அழுத்தம், ஈரப்பதம் வெப்பநிலை ஆகியவை மூட்டுவலியை பெரிதும் பாதிக்கின்றது. வெப்பநிலை மாற்றத்திற்கும், மூட்டுவலிக்கும் பல ஆய்வுகள் ஆய்வுகளில் மூட்டுகளில் உள்ள ஜவ்வுகள் ஏற்படும் பாதிப்பு, தேய்மானம் ஆகியவற்றால் தான் வலி உண்டாகின்றது.

குளிர்காலத்தில் நம் உடல் வெப்பத்தை தக்க வைக்கின்றது. வெப்பத்தை தக்க வைப்பதற்காக ஒவ்வொரு உறுப்பும் அதிக அளவு இரத்தம் செல்லுகின்றது. ஓட்டம் விரைவாக கால்கள், தோள்பட்டை, மூட்டுகளில் ரத்த நாளங்கள் விரைத்து கொள்வதால் வலியும், அசௌகரியமும் உண்டாகின்றது.

எப்படி தடுப்பது:

சில ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை கொண்டு, வீட்டு வைத்தியத்தை கொண்டு மூட்டு வலியை தவிர்க்கலாம். அதிகமாக குளிரில் மூட்டு வலியை மட்டுமல்ல, மற்ற ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் குளிரை தாங்குவதற்காக ஆடையை அணிந்து கொள்ள வேண்டும். குளிருக்கு ஏதுவான ஆடைகளை அணியாமல் வெளியில் செல்வதை தடுக்க வேண்டும்.

பாரபின் மெழுகில் தடவுவது, மூட்டு வலிக்கு நல்ல தீர்வைக் கொடுக்கும். ஹீட்டிங் பேடு பயன்படுத்துவதும் தசைகளில் உள்ள வலிகளில் இருந்து நிவாரணம் தரும். உடல் சூட்டை மூலம் சருமம் இறுகி அதன் வலிக்கும், மூட்டு வலிக்கும் நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |