குளிர்காலம் தொடங்குவதை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயில் நடை சாத்த படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் ஆனது கடல் மட்டத்திலிருந்து 10000 அடிக்கு அதிகமான தூரத்தில் அமைந்துள்ளது. எனவே இந்த கோயிலில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருக்கும். இதனால் வருடம்தோறும் நவம்பர் தொடங்கியவுடன் இந்த கோயில் சாத்தப்பட்டு விடும். இதனைத் தொடர்ந்து இந்த நவம்பர் மாதமும் 20ஆம் தேதி முதல் நடத்தப்படுவதாக சார்தான் தேவஸ்தான வாரியம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மாலை 6.45 க்கு மேல் சிறப்பு வழிபாடும் நிறுத்தப்பட்டுவிட்டது. மேலும் குளிர் காலம் முடிந்தவுடன் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் எனவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சார்தாம் யாத்திரை நிறைவடைவதை குறிக்கும் வகையில் கோயில் நடை சாத்தபடுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.அவ்வகையில் சார்தாம் யாத்திரையில் உள்ள பிற கோயில்களான கேதார்நாத் மற்றும் யமுனோத்திரி கோயில்கள் நவம்பர் 6ஆம் தேதியும் கங்கோத்ரி நவம்பர் 5ம் தேதியும் சாத்தப்படுதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.