Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து…. 16 வயது சிறுமி கூட்டு பலாத்காரம்…. வாட்ஸ் அப்பில் வெளியான வீடியோ…. அதிர்ச்சி….!!!!

திருச்சி மாவட்டம் முசிறி தாலுகாவை சேர்ந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ரங்கநாதன் என்பவர் தனது பைக்கில் அமர வைத்து காவிரி கரையோரத்தில் உள்ள தைலமர காட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்று சிறுமிக்கு குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, பின்னர் பக்கத்து ஊரிலிருந்து மணிகண்டன் உள்ளிட்ட தனது நான்கு நண்பர்களை வரவழைத்து உள்ளார். அதன் பிறகு ஐந்து பேரும் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் அதனை செல்போனில் வீடியோவாகவும் படம் எடுத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இளைஞர்கள் சிறுமியை மிரட்டி வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என கூறி மீண்டும் வெவ்வேறு இடங்களுக்கு வரவழைத்து மூன்று முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகின்றது. சில மாதங்களுக்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெற்ற நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்த இளைஞர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 5 பேரில் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அதனை கண்ட சிறுமி அதிர்ச்சி அடைந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |