Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

குளிர்பானத்தில் விஷம் கலந்த தாய்…. பெண்ணின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

குடும்ப தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணத்தில் விவசாயியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 மற்றும் மூன்று வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த லட்சுமி தனது பெண் குழந்தைக்கு குளிர்பானத்தில் பூச்சி மருந்தைக் கலந்து கொடுத்து விட்டு தானும் அதனை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து தாய் மகள் இருவரும் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு லட்சுமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக குழந்தை சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |