Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளிர்பானம் குடித்த 6 வயது சிறுவன் ரத்த வாந்தி… தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

சென்னையில் குளிர்பானம் குடித்த சிறுவனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த செந்தில் என்பரது 6 வயது மகன் வீட்டின் அருகே இருக்கக்கூடிய ஒரு கடையில் குளிர்பானத்தை வாங்கிக் குடித்துள்ளார்.. இதையடுத்து ரத்த வாந்தி எடுத்த அந்த சிறுவனுக்கு உடனே மயக்கம் ஏற்பட்டுள்ளது.. இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் பெற்றோர் அருகில் இருக்கக்கூடிய ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மகனை அனுமதித்தனர்.. அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

மேலும் அவருக்கு மூக்கிலும் வாயிலும் டியூப் வைத்து எடுக்கும்போது ரத்தம் வருவதாக மருத்துவர்கள் கூறியதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.. இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு குளிர்பானத்தின் தரம் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்..

 

Categories

Tech |