டெல்லியில் கடந்த ஆண்டுக்கு பிறகு கொரோனா பரவல் தற்போது மீண்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த கொடிய தொற்றினால் 10,000-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த கொரோனா தொற்று நோயாளிகளும் டெல்லியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களுக்கான குளிர்கால விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. விடுமுறையில் உள்ள மருத்துவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். டெல்லியில் ஒரே நாளில் 5,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை முதல் ஜனவரி 10-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.