Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குளுகுளு சீசனை முன்னிட்டு… குவிந்த சுற்றுலா பயணிகள்… பல தரப்பினரும் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் “மலைகளின் இளவரசி” என அன்போடு அழைக்கப்படுகிறது. இங்கு தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. மேலும் தொடர் விடுமுறையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இங்கு அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். இதனிடையே நட்சத்திர ஏரியில் உள்ளாசமாக படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

சிலர் படகில் நின்றபடியே செல்பி எடுத்துக்கொண்டனர். மேலும் ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் சுற்றுலாப் பயணிகள் பொழுது போக்கினர். அதனைத் தொடர்ந்து பகலில் வெப்பமும், மாலை நேரத்தில் மேக மூட்டமும் நிலவி சுற்றுலா பயணிகளை மகிழ்வித்தது. சுற்றுலா பயணிகள் இந்த குளுகுளு சீசனை அனுபவித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தந்ததால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |