கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் மலைகளின் இளவரசியான கொடைக்கானல் அமைந்துள்ளது. இங்கு தினம்தோறும் உள்நாடு மட்டும் இன்றி வெளிநாட்டில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல் தற்போது குளு குளு சீசன் முடிவடைவதால் நேற்று வாரவிடுமுறையை ஒட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர்.
அதன் பின்னர் தூண்பாரை, குணாகுகை, பைன் மரக்காடு, மோயர் பாயிண்ட், வெள்ளிநீர் வீழ்ச்சி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் தங்களது குடும்பங்களுடன் பார்த்து ரசித்துள்ளனர். அதன்பின்னர் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்துள்ளனர். இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.