உத்திரப்பிரதேச மாநிலத்தில் உயரம் குறைவாக இருக்கும் நபர் ஒருவர் காவல் நிலையத்தில் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு உதவி கோரிய நிலையில் தற்போது ஒரு பெண் அவரை திருமணம் செய்ய முன்வந்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த அசிம் மன்சூரி என்பவர் 3 அடி 2 அங்குலம் உள்ளவர். இவரை திருமணம் செய்ய யாரும் முன்வராததால் விரக்தியில் இருந்த இதையடுத்து காவல் நிலையத்தில் தனக்கு பொருத்தமான பெண்ணை தேடித் தருமாறு விண்ணப்பம் தந்தார். பல நாட்கள் திருமணம் செய்துகொள்ள பெண் தேடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பல பெண்கள் குள்ளமாக இருப்பதால் நிராகரிப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ஜாதி, மதம் , நிறம் என எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னை தேடி வரும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இதை அடுத்து ரம்ஜானுக்கு முன் திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுவதாகவும், பின்னர் தனது புது மனைவியின் தேனிலவுக்கு சிம்லா, மானாலி, கோவாவுக்கு அழைத்து செல்ல வாக்குறுதி அளித்தார். அசிம் மன்சூரி தனக்கு தேடித்தருமாறு காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தது பெரும் வைரலானது. இதையடுத்து காசியாபாத்தில் சேர்ந்த ரஹானா என்பவர் அசிம் மன்சூரி திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். இரண்டரை அடி உயரமுள்ள அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் வெகுநாட்களாய் சிரமப்பட்டு வந்துள்ளனர்.
உறவினர்களை தேடியுள்ளனர். அந்த சமயத்தில் இந்த வீடியோ கிடைத்தது அவர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்ததாகவும், இந்த திருமணத்தில் முழு சம்மதம் இருப்பதாகவும், தான் வீட்டு வேலைகளை நன்றாக செய்வேன் எனவும் அவர் தெரிவித்தார். அசிம் மன்சூரிடம் இருந்து நல்ல பதில் கிடைப்பதற்காக குடும்பத்தினர் காத்துள்ளனர். இது போன்று பல குறைகள் நம்மிடத்தில் இருந்தாலும் அதை மனம் தளராமல் ஏற்றும் நம் வாழ்க்கையை நடத்த வேண்டும்.