தென்அமெரிக்க நாடான பெருவில் சிறார்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மையை நீக்கும் (chemical castration) தண்டனையை கூடுதலாகா வழங்க அனுமதிக்கும் மசோதாவை அரசாங்கம் முன்வைக்கும் என அந்நாட்டு அமைச்சரவை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் எனவும் தண்டனையின் முடிவில் ரசாயன முறையில் காஸ்ட்ரேட் செய்யப்படுவார்கள் எனவும் அரசாங்கம் நம்புகிறது என நீதியமைச்சர் பெலிக்ஸ் செரோ தெரிவித்துள்ளார். இந்த மாதம் தொடக்கத்தில் 3 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 48 வயது நபர் நபருக்கு சோதனைக்குப் பின் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்யபட்டது.
இச்சம்பவத்தை அடுத்து இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சமூகரீதியாக பழமைவாத முன்னாள் பள்ளி ஆசிரியரான பெரு நாட்டின் ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ (Pedro Castillo), சிறார்களை கற்பழிப்பவர்கள் முன் மாதிரியான முறையில் தண்டிக்கப்பட வேண்டும் என கூறி இந்த மசோதாவுக்கு ஆதரவளித்துள்ளார். அத்துடன் சட்டமாக மாற இந்த மசோதா பெருவின் எதிர்க் கட்சி கட்டுப்பாட்டிலுள்ள காங்கிரஸ் வாயிலாக நிறைவேற்றப்பட வேண்டும். பெரும்பான்மையான எம்பிக்கள் பழமைவாதிகளாக இருக்கின்றனர். சில பேர் சிறார்களை கற்பழிப்பதற்கான தண்டனையாக மரணதண்டனையை சேர்க்க மாற்று திட்டத்தை முன் வைத்துள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்பாக அரசியல்வாதிகள் விவாதிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2018-ஆம் வருடத்தில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் அத்துமீறுபவர்களுக்கு chemical castration தண்டனையாக சேர்க்க காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால் அந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.