Categories
மாநில செய்திகள்

குழந்தைகளிடம் செல்போன் தராதீங்க… அது உங்களுக்கு தான் ஆபத்து… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை…!!!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளிடம் செல்போன் தர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை மூழ்கியுள்ளனர். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை செல்போனில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அறிவுரை கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “நாடு முழுவதிலும் நிலவிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மக்கள் தங்களின் வாழ்க்கையில் பயன்படுத்தி கொள்கிறார்கள்.

அதிலும் ஒருசில மக்கள் தங்களின் பேராசையால் திரைப்படங்களை பார்த்து பொருளாதார வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் விளைவாக அவர்கள் நினைத்த பரிசுப் பொருளை அடைய வில்லை என்ற மன உளைச்சலில் தாங்கள் மேற்படி ஆன்லைன் விளையாட்டிற்கு செலவு செய்த பணத்தை மீட்க முடியவில்லை என்ற மன வேதனைக்கு ஆளாகிறார்கள். அதன் பிறகு தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

அதனால் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தற்கொலை சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு மேலாக பல வீடுகளில் பெற்றோர்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் விளையாடுவதற்கு நேரம் ஒதுக்காமல் அவர்களின் கையில் செல்போனை கொடுத்து தவறான வழிக்கு செல்ல வாய்ப்பு அளிக்கிறார்கள். பெற்றோர்கள் குழந்தைகளின் கையில் செல்போனை கொடுத்து விட்டால் அவர்கள் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்கிறார்கள் என்று கருதுகிறார்கள்.

அதனால் குழந்தைகள் செல்போனை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை கவனிப்பது இல்லை. எனவே பெற்றோர் தங்களது செல்போனில் பொழுதுபோக்காக செல்போனில் விளையாடினாலும் சரி, குழந்தைகளுக்கு விளையாட கொடுத்தாலும் சரி குடும்பத்திற்கு தான் இழப்பு ஏற்படும் என்பதை உணர வேண்டும்.

அதனால் பொதுமக்கள் காவல்துறை சார்பாக ஆன்லைன் சூதாட்டங்கள் குறித்தும் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்தல் குறித்தும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனால் பெற்றோர்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே பெற்றோர்களாகிய நீங்களும் செல்போனின் விளையாடாதீர்கள். மேலும் உங்கள் குழந்தைகளுக்கும் செல்போனில் விளையாட அனுமதிக்காதீர்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |