Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் ஆசையை தூண்டும் பொட்டேட்டோ ரவா பிங்கர்ஸ்!!

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்சமான ஒன்று தான் இந்த உருளைக்கிழங்கு ரவா பிங்கர்ஸ்.இது நல்ல ஒரு ஈவினிங் ஸ்னாக்ஸ், குழந்தைகளின் ஆசையை தூண்டும் வகையில் அமையும்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு                  – 3
ரவை                                             – 1 டேபிள்ஸ்பூன்
சோள மாவு                                – 1 டேபிள்ஸ்பூன்
மைதா/ அரிசி மாவு              – 2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை                         – 6-7
கொத்தமல்லி                           – 7-8
மிளகாய்த்தூள்                        -1/2அரை டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள்                               -1/2அரை டேபிள்ஸ்பூன்
உப்பு                                               -தேவைக்கேற்ப

செய்முறை :

உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்துக் எடுத்து வைக்கவும் . ஒரு பாத்திரத்தில் தோல் நீக்கிய உருளை கிழங்கு சேர்த்து, அதனுடன் ரவை ஒரு டேபிள்ஸ்பூன், சோள மாவு ஒரு டேபிள்ஸ்பூன், மைதா அல்லது அரிசி மாவு ஒரு டேபிள்ஸ்பூன், 7 கருவேப்பிலை,8 கொத்தமல்லி, மிளகாய்த்தூள் ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு அரை டேபிள்ஸ்பூன், உப்பு தேவைக்கேற்ப அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். பின்பு நம் உள்ளங்கையில் எண்ணை தடவி, நாம் ஏற்கனவே பிசைந்து வைத்திருக்கும் கலவையை  உருண்டையாக பிடித்து வைக்கவும்.பின்பு வாணலியில் எண்ணெய் ஊற்றி உருட்டி வைத்திருக்கும் துண்டுகளை ஒன்று ஒன்றாக அதில் போட்டு பொரித்து எடுத்துக்கொண்டால் சுவையான பொட்டேட்டோ ரவா பிங்கர்ஸ் ரெடி.

Categories

Tech |