Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்த…”தினமும் ஒரு டம்ளர் பாதாம் பால் குடுங்க”… ரொம்ப நல்லது…!!

பாதாம் பால் தரும் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

பாதாம் பாலானது கொலஸ்ட்ராலையோ, நிறைவுற்ற கொழுப்பினையோ பெற்றிருப்பதில்லை. இது குறைந்த சோடியத்தையும், நல்ல கொழுப்பினையும் கொண்டுள்ளதால் உயர் இரத்த அழுத்தத்தைச் சீராக்கி இதய நலத்தைப் பாதுகாக்கிறது. பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது.

எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்தி கொள்ளவும், தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும்.
அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். பாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர்.

செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம். பாதாம் பாலில் குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அதாவது இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை நேரடியாக கணிசமாக அதிகரிக்காது, இதனால் நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது.

கால்சியம் மற்றும் பொட்டாசியம் தனிமங்களின் அளவுகள் உடலில் அதிகரிக்கும்போது அவை சிறுநீரகத்திற்கு பாதிப்பினை உண்டாக்குகின்றன. பாதாம் பாலில் கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவு குறைவாகவே உள்ளது. எனவே கால்சியம் மற்றும் பொட்டாசியத்தின் அளவால் சிறுநீரகப் பாதிப்படைந்தவர்கள் பாதாம் பாலினை உண்டு சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Categories

Tech |