Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கான நீல நிற ஆதார் அட்டை…. விண்ணப்பிப்பது எப்படி?… இதோ வழிமுறைகள்….!!!!

தற்போதைய காலக்கட்டத்தில் ஆதார்அட்டை மிகமுக்கியமான ஆவணமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி பல ஆவணங்களும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு அரசாங்கத் திட்டத்திலும் பயனடைய உங்களிடம் ஆதார்அட்டை இருக்க வேண்டும். இதற்கிடையில் ஆதாரை இயக்கும் UIDAI, குழந்தைகளுக்கான ஆதார் அட்டையையும் வழங்குகிறது. இது நீலநிறத்தில் இருக்கிறது. நீலநிற ஆதார் அட்டை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். UIDAI-ஆனது 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு நீலநிற ஆதார்அட்டையை வழங்கி இருக்கிறது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக் விபரங்கள் தேவையில்லை. இக்குழந்தைகளின் பயோமெட்ரிக் விபரங்களை ஆதாரமாக எடுத்துக்கொண்டு UIDAI-ஆனது ஆதார்அட்டையை வழங்குவதில்லை. UIDAI விதிகளின் அடிப்படையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குரிய ஆதார் அட்டையைப் பெறுவதற்கு, அக்குழந்தையின் பெற்றோருக்கு ஆதார்அட்டை இருப்பது அவசியம் ஆகும். அவர்களில் ஒருவரது ஆதார் அட்டையானது, குழந்தையின் ஆதாருடன் இணைக்கப்படவேண்டும்.

இதற்கு முதலாவதாக உங்களது இருப்பிடத்திற்கு அருகிலுள்ள ஆதார் அட்டை மையத்திற்கு போகவேண்டும். ஆதார் மையத்திற்கு சென்று குழந்தையின் பாதுகாவலர் “பால் ஆதார் அட்டை” பதிவு படிவத்தை பூர்த்திசெய்ய வேண்டும். அதன்பின் பதிவுப் படிவத்துடன் குழந்தையின் பிறப்புச் சான்றிதழின் நகலையும் நீங்கள் சமர்ப்பிக்கவும். அத்துடன் பெற்றோர்கள் தங்களது ஓட்டுநர் உரிமம், பான்கார்டு (அல்லது) பாஸ்போர்ட்டின் நகலை தங்கள் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இந்த செயல் முறை முடிந்ததும், உங்களது பதிவுசெய்யப்பட்ட முகவரிக்கு குழந்தையின் ஆதார்அட்டை அனுப்பப்படும்.

Categories

Tech |