குழந்தைகளுக்கு இதனை மட்டும் குடுத்து வாங்க ஆரோக்கியமா வளரும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
இன்றைய அவசராமான காலகட்டத்தில் நாம் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை சரியாக கவனித்து கொள்வதில்லை என்பது தான் உண்மை. ஆனால் நம்முடைய குழந்தைகளை நல்ல ஆரோக்கியமான முறையில் வளர்க்க வேண்டும். அதற்க்கு நாம் நம்முடைய குழந்தைகளுக்கு ஊட்ட சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளை குழந்தைகளுக்கு குடுக்க வேண்டும்.
நாம் குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது அவர்களுக்கு தேவையான அளவு மட்டுமே அளிக்க வேண்டும். நம்முடைய குழந்தைகளுக்கு பிடித்த உணவுகளை மட்டும் கொடுக்காமல் அதனோடு அவர்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் உள்ள உணவுகளையும் வழங்க வேண்டும்.
வாழைப்பழம்:
நம்முடைய குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுப்பதால் அவர்களுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைக்கின்றது. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின்களால் நம்முடைய குழந்தைகளுக்கு தேவையான எடை கிடைக்கும். மேலும் ஒரு முட்டை கொடுப்பதால் நம்முடைய குழந்தைகளுக்கு புரத சத்துக்கள் கிடைக்கின்றன.
காய்கறிகள்:
குழந்தைகள் அதிகமாக ஜங்க் உணவு பொருட்களை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் அதில் உள்ள ஆபத்துகளை புரிய வைத்து நாம் காய்கறிகளை கொடுக்க வேண்டும். ஏனெனில் நம் குழந்தைகளுக்கு தேவையான நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் அதிக அளவில் காய்கறிகளில் உள்ளது. வைட்டமின் டி, விட்டமின் ஏ சத்துக்கள் நம் குழந்தைகளுக்கு மிகவும் அவசியம்.
பால்:
பொதுவகவே குழந்தைகளுக்கு பால் என்றால் பிடிக்கும். நாம் தினமும் ஒரு டம்ளர் பல் கொடுப்பதால் நம் குழந்தைகளுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும் பழங்கள் மற்றும் பாலால் செய்யப்பட்ட உணவுகளை கொடுப்பதன் மூலம் நம்முடைய குழந்தைகளுக்கு சரியான அளவு ஊட்ட சத்துக்கள் கிடைக்கின்றன.
சாதம்:
குழந்தைகளுக்கு பிடித்த உணவை ஸ்னாக்ஸ் ஆகா மட்டுமே குடுக்க வேண்டுமே தவிர அதனை நாம் உணவாக கொடுக்க கூடாது. அவர்களுக்கு சரியான நேரத்தில் சாதம் அளிக்க வேண்டும். நம் வீட்டில் செய்யும் சாதத்தில் இவ்வளவு சத்துக்கள் உள்ளது. எனவே நாம் வீட்டு உணவு பொருட்களை பயன்படுத்துவது நம் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.