குழந்தைகளை எப்படியெல்லாம் வளர்க்கலாம், பராமரிக்கலாம் என்பதனை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
தாய்மை என்பது மிகவும் அழகானதொரு விஷயம்! அத்துடன் மிகவும் கஷ்டமானதும் கூட!! ஏனென்றால் குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை. நீங்கள் நல்லதொரு மனநிலையில் இருக்கும் போது உங்களின் குழந்தைகள் எளிதில் அந்த மனநிலையை கெடுத்துவிடுவார்கள். அவர்கள் அதை தெரிந்தே செய்வதில்லை என்பதால், உங்களால் அவர்களை விட்டுக்கொடுக்க முடியாது.
குழந்தை வேண்டுமா? என்று முன்னரே தீர்க்கமாக முடிவெடு்ப்பது மிக முக்கியமானது. அதன்படி தான் உங்களின் வாழ்க்கை அமையும். உங்களின் 5 வயது குழந்தைக்கு நடக்க, பேச, பேனாவை பிடித்து எழுத, ஸ்பூன் கொண்டு சாப்பிட சொல்லிக்கொடுக்கலாம். அதே சமயம் அவர்கள் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும் வாழ்க்கை பாடங்கள் விலை மதிக்க முடியாதது. அவற்றில் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வளர்க்கும் வழி முறைகள் .
குழந்தை அழுகிறார்கள் என்றால் அதுவே வாழ்க்கையின் முடிவு அல்ல பள்ளிக்கு செல்லும் போதும், ஒவ்வொரு விஷயத்திற்கும் அழுகிறார்கள் என்றால் அழவிடுங்கள். உணர்வுகளால் பலவீனம் அடையாதிருங்கள்.
மற்றவர்களுடன் ஒப்பிட வேண்டாம்உங்களது குழந்தையை, உங்களை அல்லது உங்களது கணவரை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம். அவர்களுக்கு அது நெகடிவ் எனர்ஜியைக் கொடுக்கும
எதை எப்போது, எப்படி கூற வேண்டுமோ யோசித்து, இடம் பொருளுக்கு ஏற்ப கூற வேண்டும்.அடுத்தவர்கள் முன்பு அதிக மார்க் எடுக்கவில்லை என்று கூற வேண்டாம். மார்க் மட்டும் ஒரு குழந்தையின் அறிவை தீர்மானித்து விடுவதில்லை.
உங்களது குழந்தையை சரளமாக பேச விடுங்கள். தவறோ சரியோ அப்போதுதான், பேச்சு சரளமாக, இன்னும் அதிக வார்த்தைகளை கற்க வழி பிறக்கும்.அதிகமாக உங்களை நுழைக்காதீர்கள்குழந்தை உங்களுடையதுதான்.
அதற்காக எதற்கெடுத்தாலும், குழந்தையிடம் உங்களது ஆதிக்கத்தை செலுத்த வேண்டாம். உங்களது ஆலோசனையை எப்போதும் ஏற்க வேண்டும் என்று கூறாதீர்கள்.
உங்களது குழந்தையும் யோசிக்க அனுமதித்து, அவர்களுடைய யோசனையையும் கேளுங்கள். குழந்தையிடம் இருந்து உங்களுக்கு புதிய சிந்தனை கிடைக்கலாம்.