உலக நாடுகளை கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸை தடுத்து நிறுத்த உலக அரங்கமே ஒன்றிணைந்து தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா என அனைத்து நாடுகளும் போட்டி போட்டுக் கொண்டு ஒரே வரிசையில் நின்று கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த இந்த சூழலில்தான் ரஷ்ய நாட்டின் கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய சோதனை நிறைவடைந்து விட்டதாக கடந்த வாரம் தெரிவித்தது. அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் மிக்கேல் முராஷ்கோ இதனை உறுதிப்படுத்தினார். ஊடகங்களும் இதை விவாதிக்க விவாதித்தனர். உலக மக்களுக்கு புதிய நம்பிக்கையும் ஏற்பட்டது.
இந்த தடுப்பூசியை முறைப்படி பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. வருகின்ற அக்டோபர் மாதம் உலக மக்களுக்கு பயன்பாட்டிற்கு இந்த தடுப்பூசி வரும் என்று எதிர்பார்ப்போடு உலகம் காத்திருக்கின்றனர். ஆனால் குழந்தைகளுக்கான தடுப்பூசி கொண்டு வருவதில் தாமதமாகும் என ரஷ்ய நாட்டில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது ரஷ்ய நிறுவனம் தரப்பில் தெரிவித்துள்ளது. இதுபற்றி ரஷ்ய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் கின்ட்ஸ்பர்க் சொல்லும் போது, நாங்கள் கண்டுபிடித்துள்ள தடுப்பூசியை குழந்தைகளுக்கு வேலை செய்யும் என்று கருதுகின்றோம். இருந்தாலும் சட்டப்படி ஒரு தடுப்பூசி பெரியவர்களுக்கு செலுத்தும் சோதனைகளில் முழு சுற்றை கடந்து செல்ல வேண்டும், அதன் பின்னர்தான் குழந்தைகளுக்கு அதனை பரிசோதிக்க முடியும்.
மூன்று கெட்ட பரிசோதனைகளும் முடிந்த பிறகு பதினெட்டு சோதனைகளை நடத்துவதற்கு நாங்கள் அனுமதிக்கப்படுவோம் என்று அவர் கூறினார். அதேபோலசெச்சனோவ் டிரான்ஸ்லேஸனல் மருத்துவம் மற்றும் உயிரிதொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் வாதிம் டாராசோவ் கூறும்போது, குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன்பாக இளம் விலங்கு மீது அதனை செலுத்த வேண்டும். அதற்குப் பிறகுதான் குழந்தைகளுக்கு தடுப்பூசி பயன்படுத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும். குழந்தைகளுக்கு தடுப்பூசி பயன்படுத்துவது குறித்து இப்போது பேசுவது சரியல்ல. கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் பிரிவினர் அல்ல அவர்கள் என்றும் குறிப்பிட்டார்.