Categories
மாநில செய்திகள்

“குழந்தைகளுக்கு சத்தான உணவு”….. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்…. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்….!!!!

குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்காக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்தி தலைமையில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளதாவது: “குழந்தைகளின் மனம், உடல் மற்றும் சமூகரீதியான வலிமையான அடித்தளம் அமைக்க 0 முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிலை மற்றும் சுகாதார நிலையை மேம்படுத்த வேண்டும்.

சிசு இறப்பு விகிதம், நோயின் தன்மையை விகிதம், ஊட்டச்சத்து குறைவு மற்றும் முன்பருவ பள்ளிக் கல்வியில் இருந்து இடை நிற்றல் ஆகியவற்றை  குறைப்பதற்காகவும், குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பணியாற்றும் பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் இந்த புத்தாக்க பயிற்சி அளிக்கப்படுகின்றது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்தம் 940 குழந்தைகள் மையங்களில் 43 ஆயிரத்து 537 குழந்தைகள் உள்ளார்கள். 8 ஆயிரத்து 960 குழந்தைகள் முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 1,546 குழந்தைகள் மிதமான வளர்ச்சி குறைபாடுடனும் மற்றும் 442 குழந்தைகள் கடுமையான வளர்ச்சி குறைபாடுடன் காணப்படுகிறார்கள். ஆக மொத்தம் 1,988 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் காணப்படுகிறார்கள். இதனால் எடை குறைவு, வளர்ச்சியின்மை குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கிட பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |