தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதியம் சத்துணவு வழங்கப்படுவது வழக்கம். இந்த சத்துணவில் மாணவ மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் முட்டை வழங்கப்பட்டு வருகின்றது. சிலசமயங்களில் முட்டை சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் சூழலும் உருவாகின்றது.
அந்தவகையில் கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பள்ளியில் அழுகிய முட்டைகள் இருந்தது தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் குழந்தைகளுக்கு சத்துணவில் தரமற்ற முட்டைகள் வழங்கப்படவில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் பல நிலைகளில் தரம் உறுதி செய்த பிறகு முட்டை மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படுகிறது. முட்டை விநியோகஸ்தர்களிடம் இருந்து தரம் உறுதி செய்த பிறகு முட்டை பெறப்படுகின்றன என்று விளக்கம் அளித்துள்ளது.