குழந்தைகளுக்கு டயப்பர் மூலம் உருவாகும் அலர்ஜி பிரச்சனையை போக்க எளிய வழிமுறைகளை இதில் தெரிந்துகொள்வோம்.
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு டயப்பர் அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இவை சில குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தாலும், சில குழந்தைகளுக்கு சர்ம பிரச்சினையை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அலர்ஜி போன்ற பாதிப்பு குழந்தைகளை தாக்குகின்றது. குழந்தைக்கு ஒவ்வொருமுறை டயப்பர் மாற்றும் போது சுத்தமான தேங்காய் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்வது நல்லது.
அலர்ஜி அதிகமாக இருந்தால் ஒவ்வொரு முறை சுத்தம் செய்த பின்னரும் சிறிது நெய் தடவி வேண்டும். தொடர்ந்து தடவும்போது அலர்ஜி விரைவில் மறையும். மேலும் ஷி பட்டர் பயன்படுத்தலாம். இதற்கு பூஞ்சை கொள்ளும் தன்மை உண்டு. இளஞ்சூடான நீரில் குழந்தை சுத்தம் செய்துவிட்டு ஷி பட்டர் தடவவும். இதன் மூலமாக குழந்தைகளுக்கு டயப்பர் அணிந்தாலும் எந்த வித சரும பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.