இந்தியாவின் 75-வது சுதந்திர தின நிறைவையொட்டி, குழந்தைகளுக்கான டூடுல் வரையும் போட்டியை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்களை கடந்துள்ளது. இன்னும் 25 வருடங்களில் 100 ஆண்டுகளை அடைய உள்ளது. இந்த 75 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியிருந்தாலும் இன்னும் செல்ல வேண்டிய தூரம் நிறைய உள்ளது. எனவே இன்னும் 25 ஆண்டுகள் கழித்து இந்தியா எப்படி இருக்கும்? என்ற தலைப்பில் குழந்தைகளுக்கு கூகுள் நிறுவனம் போட்டியை அறிவித்துள்ளது.
’25 ஆண்டுகள் கழித்து என் இந்தியா இப்படி இருக்கும்…’ என்ற தலைப்பில் டுடுல் வரைந்து, சுயவிவரங்களுடன் ஆன்லைனில் நேரடியாக அப்லோட் செய்யலாம் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பலாம். ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகளை அனுப்பலாம். கடைசி தேதி: செப்டம்பர் 30. குழந்தைகளே களமிறங்குங்கள்.