பேரிக்காயை காய் என்று அழைத்தாலும் அது பழம் தான். இதுவும் ஆப்பிள் வகையைச் சேர்ந்த ஒரு பழம்.
வெளித்தோற்றத்தில் பச்சையாக இருந்தாலும் இதில் நிறைய சத்துகள் ஒரு உள்ளது. இது மலைப்பகுதியில் விளையக்கூடியது. குறிப்பிட்ட மலைப் பகுதிகளில் விளையக்கூடியது. இதை சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2 என்ற சத்துக்கள் உள்ளது. இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து, உள்ளது.
வளரும் குழந்தைகளுக்கு இந்தப் பேரிக்காயை கொடுத்து வந்தால் எலும்பு, தசை வளர்ச்சிக்கும் மிகவும் உதவும்.
இதயம் படபடப்பு உள்ளவர்கள் தினம் இரு வேளை பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் இதயப் படபடப்பு நீங்கும்.
கர்ப்பிணி பெண்கள் குழந்தை நன்கு வளர பேரிக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது. தாய்ப்பால் சுரக்க சாப்பிடுவது மிகவும் உகந்தது. தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிடவேண்டும்.
வாய்ப்புண் குணமாக, வயிற்றுப் புண் ஆற்றும் சக்தி பேரிக்காய்க்கு உண்டு. தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டால் வயிற்றுப்புண் விரைவில் குணமாகும்.
இரத்தத்தில் இருந்து பிரிந்த தாது உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து அவை கல்லாக மாறுகின்றன. இவற்றைப் உடைத்து வெளியேற்ற தினமும் இரண்டு பேரிக்காய் சாப்பிட்டு வருவது நல்லது