Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்தமான…இனிப்பு இடியாப்பம் ரெசிபி…!!

இனிப்பு இடியாப்பம் செய்ய தேவையான பொருள்கள்:

இடியாப்ப மாவு                –  2 கப்
நெய்                                       – 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல்          –  1/2 கப்
ஏலக்காய் தூள்                 – சிறிதுஅளவு
சர்க்கரை                             – 1/2 கப்
உப்பு                                       – 1 துளி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவை  2 கப் எடுத்து  தேவையான அளவு வெந்நீர், உப்பு 1 துளி சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

இடியாப்ப அச்சை எடுத்து அதில் பிசைந்து வைத்திருக்கும் இடியாப்ப மாவை சேர்த்து இட்லி  பாத்திரத்தில் பிழிந்து, நன்கு வேக வைத்து எடுக்கவும்.

இடியாப்பங்களை தட்டில் போட்டு அதன்மேல் சர்க்கரை, நெய், தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் கலந்து  தூவினால் இடியாப்பம் உதிரி உதிரியாகவும், இனிப்பாகவும், அதிகமான சுவையுடனும் இருக்கும்.

Categories

Tech |