ஆப்பிள் பழ பஜ்ஜி செய்ய தேவையான பொருள்கள் :
ஆப்பிள் – 3
பைன்ஆப்பிள் – 3
முட்டை வெள்ளைகருகள் – 6
பால் – 250 மில்லி
மைதா – 400 கிராம்
முட்டை – 3
சர்க்கரை – 4 மேஜைக்கரண்டி
உப்பு
எண்ணெய்
முதலில் மைதா, 2 முட்டை, பால், சர்க்கரை, உப்பு கலந்து பீட்டரால் அடித்து சிறிது நேரம் வைக்கவும். பீட்டரை கழுவி விட்டு முட்டை வெள்ளைக்கருவை அடிக்கவும்.
அதன் பின் பழங்களை கழுவி தோள்களை எடுக்கவும். ரவுண்டாக வெட்டவும். கொஞ்சம் மொத்தமாக. மைதா முட்டை கலவைவுடன் நுரையாக அடித்து வைத்த வெள்ளைகருவை சிறிது சிறிதாக போட்டு ஒன்றாக கலக்கவும்.
பிறகு எண்ணெய் காய்ந்ததும் ரவுண்டாக வெட்டி வைத்திருக்கும் பழத்தை மாவில் துவைத்து எண்ணெயில் போட்டு சிவந்ததும் எடுக்கவும். சுவையான ஆப்பிள் பழ பஜ்ஜி தயார்.