Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்த சீஸ் ரோல்… ஈசியா செஞ்சி கொடுங்க…!!!

ஈவ்னிங் சாப்பிட, குழந்தைகளுக்கு பிடித்த சீஸ் ரோல் செய்வது எப்படி என்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :

தேவையான பொருள்கள் 

சீஸ் துண்டுகள்                – 10
வேகவைத்த சென்னா – 1 கப்
பெ.வெங்காயம்               – 1
குடைமிளகாய்                 – 1
கொத்தமல்லி தழை     – 1 கைப்பிடி
கரம் மசாலாதூள்           – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள்                  – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய்            – தேவைக்கு
தக்காளி சாபிஸ்             – சிறிதளவு
ரெட் துண்டுகள்               – 10

செய்முறை :

முதலில் கொத்தமல்லி, பெரிய வெங்காயம், குடைமிளகாயை ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அதன்பின் சென்னாவை வேக வைத்து, பின் மிக்சியில் போட்டு லேசாக மசித்து கொள்ளவும்.
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் வெங்காயம், குடை மிளகாயை கொட்டி லேசாக வதக்கவும். பின்னர் அதனுடன் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து, பச்சை வாசம் நீங்கியதும் சென்னா, கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கிக் கொள்ளவும். அடுத்து சூடு ஆறியதும் நன்றாக பிசைந்து நீள் வாக்கில் 10 துண்டுகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும். பின்னர் அவற்றின் மேல் சீஸ் துண்டுகளை வைத்து சுருட்டிக் கொள்ளவும்.

பிரெட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து பிழிந்து அவற்றின் மேல் சென்னா மசாலா கலவையை வைத்து நான்கு புறமும் மூடியிருக்கும்படி உருட்டி வைத்துக் கொள்ளவும். பின் தோசைக்கல்லில் சிறிதளவு நெய் ஊற்றி சூடானதும், பிரெட் ரோலை வைத்து இரு புறமும் கருகாமல் புரட்டிப்போட்டு எடுத்தால் சுவையான  பிரெட் சென்னா சீஸ் ரோல் ரெடி.

Categories

Tech |