Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு பிடித்த…சூப்பரான ரெசிபி..!!

மக்ரோன்ஸ் செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை வெள்ளைக்கரு                          – 4
சீனி                                                                     – 750 கிராம்                                                                                            முந்திரி பருப்பு                                                -சிறிதளவு                                                                                                         நெய்                                                                 -2 ஸ்பூண்

செய்முறை:

முதலில் 4 முட்டைகளை எடுத்துஅதில் உள்ள மஞ்சள் கரு கலக்காமல் வெள்ளை கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். முந்திரி பருப்பை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெள்ளை கருவை எடுத்து முள் கரண்டியை  வைத்துஅதனை நன்கு நுரை பொங்க அடித்து கொள்ளவும். அடித்த முட்டையானது பாத்திரத்தைக் கவிழ்த்தினால்  கீழே விழாமல் இருப்பது வரை நன்கு அடித்து கொள்ளவும்.

சீனியையும் சிறிது சிறிதாக அதில் கலக்கி அடிப்பதால்,  வெள்ளை பனிமலை போல் பொங்கி வருவதற்கு  30 லிருந்து 35 நிமிடம் ஆகும். நறுக்கிய முந்திரிப் பருப்பை மெதுவாக முட்டை வெள்ளைக்கருவுடன் சேர்த்து கொள்ளவும்.

ஒரு  தட்டை எடுத்து அதில்  நன்கு நெய் தடவி கொள்ளவும். அந்த  தட்டில்  இடைவெளிவிட்டு ஒரு மேஜைக்கரண்டி அளவு முட்டை கலவையை எடுத்து  கூம்பு வடிவதில்  வருமாறு  ஊற்றி கொள்ளவும். அதை அப்படியே எடுத்து அடுப்பில்  கடாயை வைத்து 100 லிருந்து 150 டிகிரி சூட்டில் வேகவைத்து எடுத்தால் சுவையான மக்ரோன் தயார்.

Categories

Tech |