Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆர்வம் போய்விட்டது… ஓ இதுதான் காரணமா…? திருமாவளவன் வேதனை…!!!!!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனக்கு  குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் ஆசை போய்விட்டது என கூறியுள்ளார்.

புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது. என்னிடம் பலர் தங்களது குழந்தைகளை கொண்டு வந்து பெயர் வைக்க சொல்லுகிறார்கள். நானும் அந்த குழந்தைகளுக்கு நல்ல ஒரு தமிழ் பெயரை சூட்டிவிடுவேன்.

ஆனால் அந்த குழந்தைகள் வளர்ந்த பிறகு குழந்தைகளிடம் பெயர் என்னவென்று கேட்டால். அவர்கள் வேறு பெயர் சொல்கிறார்கள். இந்நிலையில்  குழந்தைகளின் பெற்றோர்  என்னை கட்டாயப்படுத்தி பெயர் வைத்துவிடுகிறார்கள். ஆனால் சான்றிதழில் வேறு பெயர்கள் இருக்கிறது. இதனால் எனக்கு குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் ஆர்வமே போய்விட்டது என கூறியுள்ளார்.

Categories

Tech |