மனித சிந்தனை பேரவை சார்பில் ஈரோடு புத்தக திருவிழா ஈரோடு சிகைய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை நேற்று மாலை சிந்தனை அரங்க நிகழ்ச்சிக்கு சென்னிமலை எம்பி என் எம் ஜே இன்ஜினியரிங் கல்லூரி தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை தாங்கியுள்ளார். மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வரவேற்று பேசினார். அப்போது இந்த நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி கலந்து கொண்டு நிமிர்ந்த நன்னடை என்னும் தலைப்பில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, பெண்கள் 65% பேர் உழைக்கின்றனர்.
ஆண்கள் 35 சதவீதம் பேர் மட்டுமே உழைக்கின்றார்கள். இந்தியாவில் வேலைக்கு செல்லும் 55 சதவிகித பெண்களில் 45 சதவீதம் பேர் ஒரு வருடத்திலேயே அந்த வேலையை விட்டு விடுகின்றார்கள். இதற்கு வீட்டிலும், வெளியிலும், பணியாற்றும் இடத்திலும் ஏராளமான காரணங்கள் இருக்கிறது. இதனை ஆண்கள் உணர்ந்து பெண்களை வேலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் பெண்கள் தவறுகளை சுட்டிக்காட்டும் தைரியம் படைத்தவர்களாக இருக்க வேண்டும். இந்த தைரியத்தை குழந்தை பருவத்திலேயே ஏற்படுத்த பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும். மேலும் திரைத்துறை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.
ஆனால் திரைத்துறையில் வெற்றி பெறுபவர்கள் அனைவரும் 100 சதவீதம் உழைப்பை திருத்துவீர்கள் என்பதை மறுக்க முடியாது. இந்த சூழலில் தற்போதைய இளைஞர்களுக்கு தோல்வியை சந்திக்கும் பக்கமும் இல்லை. அதனால் தான் முயற்சி செய்ய தயங்கி வருகின்றனர். குழந்தைகளுக்கு பெற்றோர் தன்னம்பிக்கையை கற்றுக் கொடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.