இப்போது பொியவா்களுக்கு மட்டுமல்ல சிறுவா்களுக்கும் மன நல பிரச்சினைகள் ஏற்படுகிறது. பொியவா்களைப் போன்றே சிறுவா்களும் மன நல பிரச்சினைகளால் சிரமத்திற்கு ஆளாகின்றனா். ஆனால் இருவருக்குமுள்ள அறிகுறிகள் வேறுபட்டிருக்கும். கவலைக்கோளாறுகள், மனச்சோா்வு மற்றும் ADHD (Attention Deficit Hyperactivity Disorder) ஆகியவை மனநல பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் சிறுவா்களுக்கு ஏற்படுகிறது. தொடக்க நிலையிலேயே அதை கண்டுபிடித்து குணப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதை செய்ய தவறினால் அவற்றை குணப்படுத்த முடியாதநிலை ஏற்படும். தற்போது குழந்தைகளிடம் இருக்கும் மன நல கோளாறுகள் பற்றி தெரிந்துகொள்வோம்.
# மனச் சோா்வையும் பசியையும் கட்டுப்படுத்துவது மூளையின் ஒரேபகுதி ஆகும். மனச் சோா்வு, பசியின்மை மற்றும் எடைகுறைதல் ஆகியவை ஏற்படுத்தும். எனவே குழந்தைகளுக்கு சரியான நடத்தை தெரபிகொடுத்தால் இதுப் போன்ற பிரச்சினையை எளிதில் சாிசெய்ய இயலும். உடல் எடையை அதிகாிக்கவேண்டும் என அதிகம் கவலைப்பட்டாலும் அது பிரச்சினையாகி விடும்.
# உடலில் ஏற்படும் தசைஇறுக்கம், தலைவலி, தூக்கம் இன்மை மற்றும் ஓய்வின்மை ஆகிய பிரச்சினைகள்கூட மனநல பாதிப்பின் அறிகுறிகளாக இருக்கலாம். ஆகவே நம்முடைய குழந்தைகள் மேற்குறிய அறிகுறிகள் நமக்கு உள்ளதாக அடிக்கடி கூறினால் அதற்குரிய காரணங்களை உடனடியாக கண்டுபிடிக்கவேண்டும்.
# படிப்பில் மிகவும் சுட்டியாக உள்ள குழந்தை நாளடைவில் படிப்பதில் நாட்டம் இல்லாமல் இருந்தால் அம்மாற்றத்தை உடனடியாக கவனிக்க வேண்டும். வகுப்புகளில் நடைபெறும் பாடங்களில் கவனம் இல்லாமல் இருப்பது, பள்ளியில் நடக்கும் படிப்பு சாராத பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருப்பது, வகுப்புகளுக்கு மட்டம் போடுவது ஆகியவை இருந்தால் அவை மனஅழுத்தத்தின் அறிகுறிகளாகும்.
# பயங்கரமான கனவு, கவலை, கோபம், சோகம், சங்கடம் மற்றும் வெறுப்பு ஆகியவையின் காரணமாக அளவுக்கு அதிகமான பயம் (அல்லது) அழுகை ஏற்படும். குழந்தைகள் ஏதேனும் அதிா்ச்சிகரமான நிகழ்வுகளைப் பார்த்தால் அவை அவா்களுக்கு அவ்வப்போது பயங்கரகனவுகளாக வரும். இதனால் அவா்களுடைய மன நலம் பாதிக்கப்படலாம்.