Categories
மாவட்ட செய்திகள்

“குழந்தைகளுக்கு மாதந்தோறும் 4,000″…. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் நியூஸ்….!!!!!!

ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதி உதவி வழங்கப்பட இருப்பதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக பெற்றோரை இழந்த குழந்தைகள், எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், சிறைவாசிகளின் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு மிஷன் வாட்சாலயா திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்படுகின்றது.

அதாவது மாதந்தோறும் 4000 வீதம் மூன்று வருடங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகின்றது. இதற்கு விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம் கிராம பகுதியில் உள்ளவர்களுக்கு 72 ஆயிரமாகவும் நகரப் பகுதியில் உள்ளவர்களுக்கு 96 ஆயிரம் ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கின்றது. ஆகையால் இத்திட்டத்தில் பயனடைய விண்ணப்பிப்பவர்கள் வருமானச் சான்றுதழ், குழந்தையின் கல்விச்சான்று, வங்கி கணக்கு எண், ஆதார், குடும்ப அட்டை நகல், பெற்றோரின் இறப்புச் சான்று உள்ளிட்ட ஆவணங்கள் குழந்தையின் புகைப்படத்துடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, திருமஞ்சன வீதி, திருவிழந்தூர், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.

Categories

Tech |