Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு மாஸ்க் தேவையில்லை…. ICMR அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஊரடங்கு அமல் படுத்தப் படுவது மற்றும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று முகக் கவசம் அணிவது. சிறு வயது குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம். அதனை மீறி செயல்படுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முக கவசம் தேவையில்லை. ஆனால் 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று ICMR அறிவித்துள்ளது. லேசான அறிகுறி உள்ள குழந்தைகளுக்கு இணையதளம் மூலம் மருத்துவரின் ஆலோசனை பெற்று வீட்டில் வைத்து சிகிச்சை அளிக்கலாம். குழந்தைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தரக்கூடாது. சிடி ஸ்கேன் எடுக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |