Categories
லைப் ஸ்டைல்

குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா?… எப்போது கொடுக்கணும்…!!!

திட உணவுகளைக் குழந்தைகள் சாப்பிட தயார் ஆனால் ஒரு நாளைக்கு ஒரு முட்டையை மட்டுமே குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

நம் குழந்தைகளை பராமரிப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அவர்களுக்கு உணவு கொடுப்பது. குழந்தைகள் திட உணவுகளை சாப்பிட தயார் ஆனால் மிக கவனத்துடன் இருக்க வேண்டும். அவ்வாறு திட உணவுகளை சாப்பிட தயாராகும் குழந்தைகளுக்கு 2 வயதுக்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு முட்டையை மட்டுமே கொடுக்க வேண்டும். ஆனால் அந்த முட்டையை நன்றாக வேக வைத்து நன்கு மசித்து கொடுக்க வேண்டும். ஏனெனில் முட்டை செரிமானமாகக் கூடுதல் நேரமாகும்.

அதனால் முழுமையாக முட்டை கொடுக்கும்போது குழந்தைகளுக்கு அஜீரண கோளாறு ஏற்படும். மேலும் புதிய உணவுகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் போது, ஒரு உணவை முதல் முறை கொடுத்த பிறகு, இரண்டாவது புதிய உணவை அறிமுகப்படுத்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் இடைவெளி எடுத்துக் கொள்வது அவசியம். அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து பலவகையான உணவுகளை கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடல்நிலை சரியில்லாமல் போகும். அதனால் மிகுந்த கவனத்துடன் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும்.

Categories

Tech |