குழந்தை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். மழலையின் சிரிப்பில் மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். வீட்டில் குழந்தைகள் வருகை சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். எனவே குழந்தைகளை பார்த்து யாராக இருந்தாலும் கண்ணத்தில் முத்தம் இடுவார்கள். முத்தம் என்பது பாசத்தை காண்பிப்பதற்கான வழி. அதில் எந்த தீங்கும் கிடையாது. ஆனால் கைக்குழந்தைகளுக்கு முத்தமிட வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். பொதுவாக பிறந்த குழந்தைகளை முத்த வேண்டாம் என்று பெற்றோர்கள் மற்றவர்களிடம் சொல்வது பெரிய தவறு ஒன்றும் கிடையாது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். வெளியாட்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள் கூட தங்களுடைய குழந்தைகளை முத்தமிடுவது தவிர்க்க வேண்டும்.
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். எனவே அவர்களை கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம்.
நம்முடைய முகம் கூட ஆயிரக்கணக்கான நுண்ணியிரிகளால் மூடப்பட்டிருக்கும். நாம் முத்தமிடும்போது இந்த நோய்க் கிருமிகள் குழந்தைகளை தாக்கக்கூடும்.
நம்முடைய கைகளில் ஆயிரக்கணக்கான கிருமிகள் இருக்கும். நாம் குழந்தைகளை தொடும்போது அந்த கிருமிகள் அவர்களுக்கு பரவலாம். எனவே குழந்தையை தொடுவதற்கு முன்பு கைகழுவ வேண்டும் என்று கூறப்படுகிறது.
சிலருக்கு உதடுகளில் குளிர் புண்கள் இருக்கலாம். அப்படி இருக்கும் பட்சத்தில் குழந்தையை ஒருவர் முத்தமிடுவதால் வைரஸ் அவர்களுக்கு எளிதாக பரவுகிறது.
வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் குழந்தைகள் முகம் அல்லது வாயை தொட்டாலும் சளி சவ்வுகளை அடைத்து பலவீனமான தொற்றுக்குள்ளாகின்றனர்.
குழந்தைகள் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்கள் என்பதால் வைரஸ்கள் விரைவாக பெருகி மூளை மற்றும் முதுகில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.